பாகிஸ்தானில் மேலும் 4,646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பாகிஸ்தானில் மேலும் 4,646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்,
உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொடூர கொரோனா பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொதுஇடங்களில் மக்கள் சமூகஇடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,646 ஆகும். இதன்மூலம் அங்கு நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,08,317 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 105 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 2,172 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 35,018 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் பாகிஸ்தான் 16-வது இடத்தில் உள்ளது.
Related Tags :
Next Story