கல்வான் பள்ளதாக்கு மோதல் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் முதல் முறையாக சீனா ஒப்புதல்


கல்வான் பள்ளதாக்கு மோதல் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் முதல் முறையாக சீனா ஒப்புதல்
x
தினத்தந்தி 2 July 2020 12:04 PM IST (Updated: 2 July 2020 12:04 PM IST)
t-max-icont-min-icon

கல்வான் பள்ளதாக்கு மோதலில் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் தான் என முதல் முறையாக சீனா ஒப்பு கொண்டு உள்ளது.

பீஜிங்

இந்திய- சீன இடையேயான எல்லை மோதல் போக்கு கடந்த ஒரு மாதத்திற்கு  மேலாக நீடிக்கின்றன.

லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை

பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தையைத் நடைபெற்றாலும், மறுபுறம் காஷ்மீர் முதல் லடாக் எல்லை வரை இருநாட்டு படைகளும் ஆயுதங்களை குவிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சீன பாதுகாப்புத் துறை முதல்முறையாகஇந்தியாவுடன் தீவிரமாக போரிட்டு வருகிறோம். எல்லையில் இந்திய நிலப்பரப்பை கைப்பற்றி உள்ளோம். எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம்தான் என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சீன பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதுதொடர்பாக தூதரக அலுவலகத்திடம் சீனாவின் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். கடுமையான சண்டையில் சீன தரப்புக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போரில் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை சீன அரசு பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் எத்தனை வீரர்கள் உயிரிழந்தார்கள் என்றவிவரத்தை வெளியிடவில்லை.

எல்லையில் இந்திய வீரர்களுக்கு எதிராக சீன ராணுவம் தாக்குதல் தொடுத்துள்ளது என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் குற்றம் சாட்டியிருப்பது பொய்" என்று சீன பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Next Story