உலக செய்திகள்

சீனாவில் அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களுக்கு தடை + "||" + China blocks Indian media websites, INS seeks govt action

சீனாவில் அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களுக்கு தடை

சீனாவில் அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களுக்கு தடை
இந்திய ஊடகம் மற்றும் வலைத்தளங்களை சீனா தடை செய்து உள்ளது இதற்கு இந்திய செய்திதாள் சங்கம் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது.
பீஜிங்

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன.

சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்திருப்பது தொடர்பாக இந்தியாவுக்கான சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசின் நடவடிக்கை இந்தியாவின் சந்தை போட்டிக்கும், நுகர்வோர் நலனுக்கும் உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மீதான இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ ஆதரவளித்துள்ளார். 

இந்த நிலையில் சீனா அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும்  செய்தி இணையதளங்களை தடை செய்து உள்ளது. இதை தொடர்ந்து இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐஎன்எஸ்)  ஒரு அறிக்கையை வெளியிட்டது,அதில் உறுப்பினர்கள் சார்பாக ஐ.என்.எஸ் தலைவர் ஷைலேஷ் குப்தாகூறி இருப்பதாவது:-

இந்திய செய்தித்தாள்கள் மற்றும் ஊடக வலைத்தளங்களின் அணுகலை  ன அரசாங்கத்தின் நடவடிக்கை கட்டுப்படுத்த முடியாது என்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஃபயர்வாலை உருவாக்குவதன் மூலம் விபிஎன் சேவையகம் வழியாக அணுகல் தடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம்  "இந்தியாவில் சீன ஊடகங்களுக்கான அனைத்து வகையான அணுகல்களையும் தடைசெய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்திய ஊடக நிறுவனங்களில் சீனர்கள் மேற்கொண்ட ஒத்துழைப்புகள் / முதலீடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" என்றும் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது என கூறும் சீனாவின் உண்மையான முகம் என்ன...?
விரிவாக்கம் அல்லது பகுதிகளை ஆக்கிரமித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதோ இல்லை. எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது என கூறும் சீனாவின் உண்மையான முகம் என்ன...?
2. “சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியது” - அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு
சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
3. கொரோனா நோயை உலகிற்கு கட்டவிழ்த்து விட்ட சீனாவை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் - டொனால்டு டிரம்ப்
கொரோனா நோயை உலகிற்கு கட்டவிழ்த்து விட்ட சீனாவை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
4. சீன ஜெட் விமானங்களின் வான்வெளி ஊடுருவல் அதிகரித்து உள்ளது பின்வாங்குமாறு தைவான் கோரிக்கை
சீன ஜெட் விமானங்களின் வான்வெளி '' ஊடுருவல் அதிகரித்துள்ளதை அடுத்து சீனாவிடம் பின்வாங்குமாறு தைவான் அதிபர் சாய் இங்-வென் கூறினார்.
5. உலகம் முழுவதும் சீன ராணுவ கண்காணிப்பில் உள்ள 24 லட்சம் விஐபிகள்; இந்தியாவில் 10 ஆயிரம் பேர்
உலகம் முழுவதும் முக்கியமான 24 லட்சம் பேரை சீன ராணூவம் கண்காணித்து வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 10 ஆயிரம் பேரும் கண்காணிக்கபட்டு வருகின்றனர்.