உலக செய்திகள்

லடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை + "||" + India-China border face-off part of Chinese Communist Party’s “aggressive” stance, says White House

லடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை

லடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை
லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது... என வெள்ளை மாளிகை எச்சரித்து உள்ளது.

வாஷிங்டன்

உலகில் பல்வேறு நாடுகளிடம் சீனா இராணுவ ரீதியாக அத்து மீறுவது போன்று, இந்தியாவுடனும் அத்து மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையிலான லடாக் மோதலை உலக நாடுகள் கவனிக்க தொடங்கியுள்ளது.இதில், சீனா செய்யும் அத்துமீறலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

லடாக் பிரச்சினையை பொறுத்தவரை இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம், இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்புவோம் என்று அமெரிக்கா வெளிப்படையாக கூறிஉள்ளது.

இந்தநிலையில் இந்தியா- சீனா மோதல் தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், இந்தியா - சீனா இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த மோதலை நாங்கள் தீவிரமாக கவனித்து வருகிறோம். இரண்டு நாடுகளின் நிலைப்பாட்டை விசாரித்து வருகிறோம். அவர்களின் பேச்சுவார்த்தைகளை பின் தொடர்ந்து வருகிறோம்.

இரண்டு நாடுகளும் பிரசசினையை தீர்க்க முயன்று வருவது தெரியும். எல்லை பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பிரச்சினை மேலும் மோசமாக கூடாது என்று இந்தியாவும் - சீனாவும் விரும்புகிறது. இதனால் லடாக் எல்லையில் விரைவில் பிரச்சனை தீரும் என்று எதிர்பார்க்கிறோம். எல்லையில் பழைய நிலைமை திரும்ப வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் விருப்பம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சீனாவின் செயல்களை கண்காணித்து வருகிறார். சீனா உலகம் முழுவதும் அத்துமீறி வருகிறது. உலகின் பிற நாடுகளில் சீனா எப்படி அத்துமீறுகிறதோ அதே போல இந்தியாவிலும் அத்துமீறுகிறது என்று டிரம்ப் நம்புகிறார்.சீனாவிடம் ஏதோ திட்டம் உள்ளது அதைத்தான் நாங்கள் கவனிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம்: அமெரிக்கா
ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2. இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம்: எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் - முப்படைகள் தளபதி பிபின் ராவத்
இந்தியா-சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாக முப்படைகள் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
3. அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு - பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருந்து டிரம்ப் பாதியிலேயே வெளியேறினார்
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு காரணமாக ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
4. அமெரிக்காவில் எரிவாயு விபத்து: ஒருவர் பலி, அடுத்தடுத்த வீடுகள் பலத்த சேதம்
அமெரிக்காவின் மெரிலாண்ட் மாகாணத்தில் பால்டிமோர் என்ற இடத்தில் இயற்கை எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டது.
5. அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா - ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது-அமெரிக்க புலனாய்வுத்துறை
அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது என அமெரிக்க புலனாய்வுத்துறை கூறி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...