தென் சீனக் கடலில் சீனாவின் அனைத்து கடல்சார் கோரிக்கைகளையும் அமெரிக்கா நிராகரித்தது
தென் சீனக் கடலில் சீனாவின் அனைத்து கடல்சார் கோரிக்கைகளையும் அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்து உள்ளது.
வாஷிங்டன்
அமெரிக்காவின் சீன தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தென் சீனக் கடலில் சீனாவின் சர்ச்சைக்குரிய கூற்றுக்களை நிராகரிக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையை உறுதியாக எதிர்ப்பதாக சீனா கூறி உள்ளது.மேலும் சீனா தனது அண்டை நாடுகளை கொடுமைப்படுத்துவதாக கூறும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை "முற்றிலும் நியாயமற்றது" என்றும் சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா நேரடியாக மோதல்களில் ஈடுபடும் நாடு அல்ல. இருப்பினும், இது பிரச்சினையில் தலையிட்டு வருகிறது
இது ஸ்திரத்தன்மையைக் காக்கும் போலிக்காரணத்தின் கீழ், பதற்றத்தைத் தூண்டுவது மற்றும் பிராந்தியத்தில் மோதலைத் தூண்டுகிறது என கூறி உள்ளது.
அண்மை காலங்களில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மோசமடைவதை பிரதிபலிக்கும் ஒரு நீண்டகால பரபரப்பான பிராந்திய தகராறு குறித்த தனது நிலைப்பட்டை கடுமையாக்குவதில் தென் சீனக் கடலில் சீனாவின் அனைத்து கடல்சார் கோரிக்கைகளையும் அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்து உள்ளது.
அண்மைய மாதங்களில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மோசமடைப்தை பிரதிபலிக்கும் ஒரு நீண்டகால பரபரப்பான பிராந்திய தகராறு குறித்த தனது நிலையை கடுமையாக்குவதில் தென் சீனக் கடலில் சீனாவின் அனைத்து கடல்சார் கோரிக்கைகளையும் அமெரிக்கா திங்களன்று திட்டவட்டமாக நிராகரித்தது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாங்கள் அமெரிக்க கொள்கையை அந்த பிராந்தியத்தின் ஒரு முக்கியமான, சர்ச்சைக்குரிய பகுதியான தென் சீனக் கடலில் பலப்படுத்துகிறோம். தென்சீனக் கடலின் பெரும்பகுதி முழுவதும் கடல் வளங்களுக்களை சீனா சொந்தம்கொண்டாடுவது, கட்டுப்படுத்த கொடுமைப்படுத்துதல் நடவடிக்கையை மேற்கொள்வது முற்றிலும் சட்டவிரோதமானது என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.
தென் சீனக் கடலில் சீனாவின் கடல்சார் உரிமைகோரல்களை நிராகரித்த 1982 ஆம் ஆண்டு கடல் மாநாட்டின் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நடுவர் தீர்ப்பாயத்தின் 2016 உத்தரவுடன் அமெரிக்கா தன்னை சீரமைத்துக்கொண்டுள்ளது.
"தென் சீனக் கடலை அதன் கடல் சாம்ராஜ்யமாகக் கருத சீனாவை உலகம் அனுமதிக்காது. அமெரிக்கா நமது தென்கிழக்கு ஆசிய நட்பு நாடுகளுடனும், வெளிநாட்டு வளங்களுக்கான தங்கள் இறையாண்மையை பாதுகாப்பதில் பங்காளிகளுடனும் இணைந்து நிற்கிறது, சர்வதேச உரிமைகளின் கீழ் அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு இணங்க அமெரிக்கா செயல்படும் என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story