2019-20 ஆம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்ய அக்டோபர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு


2019-20 ஆம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்ய அக்டோபர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 31 Aug 2020 6:11 PM GMT (Updated: 31 Aug 2020 6:11 PM GMT)

2019-20 ஆம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்ய அக்டோபர் 31 வரை அவகாசம் நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியை கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 31 ஆம் தேதியாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவி உள்ள இந்த காலகட்டத்தில் தொழில்பாதிப்பு, பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் 2019-20 ஆம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி எனப்படும் சேவை வரியை தாக்கல் செய்ய கடைசி தேதி அக்டோபர் 31 ஆக நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு கால தாமத கட்டணம், வட்டி என அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story