கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரமா? - உலக சுகாதார அமைப்பு இந்த மாதம் முடிவு


கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரமா? - உலக சுகாதார அமைப்பு இந்த மாதம் முடிவு
x
தினத்தந்தி 1 Oct 2021 5:19 AM IST (Updated: 1 Oct 2021 5:19 AM IST)
t-max-icont-min-icon

கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் தொடர்பாக இந்த மாதம் முடிவு எடுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனீவா,

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி கோவேக்சின். ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தின்கீழ் பயன்பாட்டில் உள்ள இந்த தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டு அங்கீகார பட்டியலில் சேர்க்கக்கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இந்த விண்ணப்பம் உலக சுகாதார அமைப்பின் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக இந்த மாதம் முடிவு எடுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கேட்டிருந்த அனைத்து தரவுகளையும் சமர்ப்பித்து விட்டதாக பாரத் பயோடெக் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story