இலங்கை சிறையில் இருந்து 11 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையிலிருந்து 11 புதுக்கோட்டை மீனவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு,
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த மாதம் இரண்டு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் 11 மீனவர்களையும் விசாரணைக்காக இலங்கையில் உள்ள ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 11 மீனவர்களையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் மீனவர்களின் 2 படகுகளையும் அரசுடமையாக்க உத்தரவிட்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





