பிலிப்பைன்சில் திடீரென தீப்பற்றி எரிந்த அடுக்குமாடி கட்டிடம்.. 15 பேர் உயிரிழப்பு


பிலிப்பைன்சில் திடீரென தீப்பற்றி எரிந்த அடுக்குமாடி கட்டிடம்.. 15 பேர் உயிரிழப்பு
x

அந்த கட்டிடத்தில் காலணி மற்றும் பேக் வகைகள் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிலிப்பைன்சின் மணிலாவில் உள்ள இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஆடை தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடம் மரப்பலகை மற்றும் கான்கிரீட் கொண்ட கட்டிடம் என்பதால் தீ மளமளவென குடியிருப்பு முழுவதும் பரவியது

தீப்பற்றியபோது அந்த கட்டிடத்தில் மொத்தம் 18 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 3 பேர் மட்டுமே வெளியேறி உயிர்தப்பினர். மற்ற 15 பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இறந்தவர்களில் அந்த குடியிருப்பு மற்றும் ஆடை தொழிற்சாலை உரிமையாளரும் ஒருவர்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த கட்டிடத்தில் காலணி மற்றும் பேக் வகைகள் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு மாறாக டி-ஷர்ட் தயாரிப்பு மற்றும் அதில் பிரிண்டிங் பணிகள் மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Next Story