ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 17 பேர் சாவு


ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 17 பேர் சாவு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 8 Aug 2023 8:26 PM GMT (Updated: 9 Aug 2023 8:11 AM GMT)

கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

பமாக்கோ,

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகிறது. அவர்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் போன்றவை மூலம் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர்.

இந்தநிலையில் மாலியின் போடியோ கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.


Next Story