சீனா: சோதனையின் போது மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த மின்சார காா் - 2 போ் பலி


சீனா: சோதனையின் போது மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த மின்சார காா் - 2 போ் பலி
x

சீனாவின் நியோ எலெக்ட்ரிக் காா் தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாவது மாடியில் இருந்து எலெக்ட்ரிக் காா் விழுந்ததில் காாில் இருந்த 2 போ் பாிதாபமாக உயிாிழந்தனா்.

ஷாங்காய்,

சீனாவின் முன்னணி எலெக்ட்ரிக் காா் தயாரிப்பு நிறுவனம் நியோ ஆகும். இதன் ஷாங்காய் தலைமை அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் எலெக்ட்ரிக் கார் ஒன்றில் அமா்ந்து 2 போ் சோதனை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது எதிா்பாராத விதமாக எலெக்ட்ரிக் காா் ஜன்னலை உடைத்து கொண்டு கட்டிடத்தின் வெளியே வந்து விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் காருக்கு இருந்த நியோ நிறுவன ஊழியா் உள்ளிட்ட 2 போ் பாிதாபமாக உயிாிழந்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினா் காருக்குள் இருந்தவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த விபத்து தொடா்பாக விசாரணை நடத்த பாதுகாப்பு துறைக்கு நியோ நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மேலும்,இந்த விபத்து வாகனத்தால் ஏற்படவில்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்தி உள்ளோம் என நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story