பிரான்ஸ் அதிபர் தேர்தல்: 65 சதவீத வாக்குகளுடன் இம்மானுவேல் மேக்ரான் வெற்றி


பிரான்ஸ் அதிபர் தேர்தல்:  65 சதவீத வாக்குகளுடன் இம்மானுவேல் மேக்ரான் வெற்றி
x
தினத்தந்தி 7 May 2017 6:55 PM GMT (Updated: 2017-05-08T00:24:39+05:30)

பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரான் 65 சதவீத வாக்குகளுடன் மெரீன் லே பென்னை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

பாரீஸ்,

மேக்ரானுக்கு கடும் போட்டியாக இருந்த மெரீன் தனது தோல்வியை ஏற்று கொண்டார்.  அவர், மேக்ரானை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார்.  அதன்பின்னர், வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மேக்ரானுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

எங்களது நீண்டகால நட்பு நாடுகளில் பிரான்சும் ஒன்று.  புதிய அதிபருடன் விரிவான அளவில் முன்னுரிமைக்கான விவகாரங்களில் பணியாற்றும் எதிர்பார்ப்பில் நாங்கள் இருக்கிறோம் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் மேக்ரான் வெற்றி பெற்ற நிலையில் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்துள்ளனர்.

Next Story