மான்செஸ்டர் குண்டு வெடிப்பு: நொறுங்கிவிட்டேன், பேச வார்த்தைகள் இல்லை - அரியானா கிராண்டே


மான்செஸ்டர் குண்டு வெடிப்பு: நொறுங்கிவிட்டேன், பேச வார்த்தைகள் இல்லை - அரியானா கிராண்டே
x
தினத்தந்தி 23 May 2017 4:01 AM GMT (Updated: 23 May 2017 4:00 AM GMT)

மான்செஸ்டர் குண்டுவெடிப்பை அடுத்து தான் நொறுங்கிவிட்டதாக பாடகி அரியானா கிராண்டே தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.


லண்டன்,
 
பிரிட்டனின் மான்செஸ்டரில் மைதானம் ஒன்றில் நேற்று இரவு அமெரிக்க இசை கலைஞர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்தது முடிந்ததும் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. தற்கொலை பயங்கரவாதி நடத்தியதாக கூறப்படும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். குண்டு வெடிப்பில் பாடகி அரியானா கிராண்டே உயிர்தப்பினார். குண்டு வெடிப்பை அடுத்து அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில் “நான் நொறுங்கிவிட்டேன், என்னுடைய அடி மனதிலிருந்து நான் மிகவும் வருந்துகின்றேன். பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை,” என குறிப்பிட்டு உள்ளார். 

Next Story