மத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியது; 50 பேர் பலி


மத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியது; 50 பேர் பலி
x
தினத்தந்தி 4 Jun 2018 1:31 AM GMT (Updated: 4 Jun 2018 1:31 AM GMT)

மத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் 50 பேர் மூழ்கி பலியாகினர்.

துனிஸ்,

துனிஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் சட்டவிரோத முறையில் புலம்பெயர்வது வழக்கம்.  இதற்கு அவர்கள் மத்திய தரை கடல் பகுதியை பயன்படுத்தி வந்தனர்.  இவர்களில் பலர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி பலியாகின்றனர்.

இந்த நிலையில், 30 அடி நீள படகு ஒன்றில் 180க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக மத்திய தரைக்கடல் வழியே பயணம் செய்துள்ளனர்.  படகிற்குள் திடீரென நீர் கசிந்து உட்புகுந்துள்ளது.  இதில் படகு கடலில் மூழ்கியது.

இதுபற்றிய தகவல் கிடைத்து கடலோர படை மற்றும் கப்பற்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவத்தில் 50 பேர் வரை பலியாகினர்.  68 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

துனிஷிய நாட்டின் தென்கடலோர பகுதியில் இருந்து இதுவரை 47 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  ராணுவ விமானம் உதவியுடன் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரியில் இதுபோன்று புலம்பெயர்ந்து சென்றவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்தில் சிக்கியதில் 90 பேர் பலியாகினர் என புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story