தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகம்: பிரதமர் மோடிக்கு முகம்மது நஷீத் வாழ்த்து


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகம்: பிரதமர் மோடிக்கு முகம்மது நஷீத் வாழ்த்து
x
தினத்தந்தி 20 May 2019 5:31 AM GMT (Updated: 20 May 2019 5:31 AM GMT)

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ள நிலையில், மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மாலே,

நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து இருக்கிறது. கடைசி மற்றும் 7-வது கட்டமாக நேற்று உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட 8  மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.

அனைத்து கட்ட தேர்தல்களும் முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டன. இவற்றில் பெரும்பாலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றே கூறப்பட்டு இருந்தது.

இதன் எதிரொலியாக மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்திய தேர்தல் முடிவடைந்த நிலையில் நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாலத்தீவு மக்களும் அரசாங்கமும் பிரதமர் மோடியுடனும் பாஜக தலைமையிலான ஆட்சியுடனும் நெருங்கிய உறவைத் தொடர்வதில் மகிழ்ச்சியடைவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story