பசியில் தன் வாலை தானே விழுங்கிய பாம்பு

அமெரிக்காவில் பசியில் இருந்த பாம்பு ஒன்று, அதன் வால் பகுதியை விழுங்கிய வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிரண்ட் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்ட கிங் ஸ்நேக் வகை பாம்பு ஒன்று, தனது தீராத பசியில் இருப்பிடத்தில் உணவு கிடைக்காததால் தனது வாலை சாப்பிட தொடங்கியது.
இதனை பார்த்த சரணலாயத்தில் பணியாற்றிய ஊழியர் ஜெஸ்ஸி ரோத்தக்கர் என்பவர், பாம்பின் மூக்கு பகுதியில் லேசாக தட்டிக்கொடுத்து, அது விழுங்கிய அதன் வாலை வெளியே எடுத்தார்.
தற்போது இந்த வீடியோ காட்சியை முகநூலில் பதிவிட்ட ரோத்தக்கர், ‘கிங் ஸ்நேக்’ வகை பாம்புகள் பிற வகை பாம்புகளை உண்ணக்கூடியது என்றும், சில நேரம் அதன் வால் பகுதியை வேறு பாம்பின் மிச்ச பகுதி என தவறாக நினைத்து விழுங்கும் எனவும், பாம்பு தனது வாலை விழுங்கியபோது, அதன் மூக்கில் தட்டி அதற்கு அச்சத்தை ஏற்படுத்தி வாலை விடுவித்ததாகவும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story