அமெரிக்காவில் வினோதமான டிவி மனிதன்...


அமெரிக்காவில் வினோதமான டிவி மனிதன்...
x
தினத்தந்தி 14 Aug 2019 11:24 AM IST (Updated: 14 Aug 2019 11:24 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் வினோதமான டிவி மனிதன், வெர்ஜீனியா மாநிலத்தில் வசிக்கும் மக்களின் வீட்டு வாசல்களில் டிவி பெட்டிகளை விட்டு சென்றுள்ளார்.

வெர்ஜீனியா,

கடந்த திங்கள்கிழமை காலை, வெர்ஜீனியா மாநிலத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் பழைய தொலைக்காட்சி பெட்டிகளை கண்டதை தொடர்ந்து இந்த வினோதமான  நிகழ்வு அமெரிக்காவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வினோதமான டி.வி மனிதன், அவரின் தலையில் ஒரு டிவி பெட்டியை அணிந்துக்கொண்டு இரவு நேரத்தில் சுமார் 60 பழைய தொலைக்காட்சி  பெட்டிகளை அங்கு வசிக்கும் குடிமக்களின் வீட்டு வாசல்களில் விட்டு சென்றது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. அந்த வினோதமான நபர் குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இதே போன்று மற்றொரு சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் நடந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வினோதமான நபரை அப்பகுதி மக்கள் “டிவி சாண்டோ கிளாஸ்” என  கூறுகின்றனர். இதை குறும்புத்தனமான செயலாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். மேலும், அந்நபர் எந்த விதமான சட்ட மீறுதல்களிலும் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது.
1 More update

Next Story