உலக செய்திகள்

சார்ஜாவில் 12-வது குழந்தைகள் வாசிப்பு திருவிழா அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்குகிறது + "||" + 12th Children's Reading Festival in Sharjah

சார்ஜாவில் 12-வது குழந்தைகள் வாசிப்பு திருவிழா அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்குகிறது

சார்ஜாவில் 12-வது குழந்தைகள் வாசிப்பு திருவிழா அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்குகிறது
சார்ஜாவில் 12-வது குழந்தைகள் வாசிப்பு திருவிழா அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கும் என சார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சார்ஜா,

சார்ஜாவில் 12-வது குழந்தைகள் வாசிப்பு திருவிழா அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கும் என சார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் அகமது பின் அல் அமெரி கூறியதாவது:-

‘உங்களது கற்பனையில்’

சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி மற்றும் சார்ஜா ஆட்சியாளரின் மனைவி ஷேக்கா ஜவகர் பிந்த் முகம்மது அல் காசிமி ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 12-வது குழந்தைகள் வாசிப்புத் திருவிழா அடுத்த மாதம்(மே) 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த திருவிழாவானது ‘உங்களது கற்பனையில்’ என்ற கருப்பொருளில் நடக்க இருக்கிறது.

இந்த திருவிழா சார்ஜா எக்ஸ்போ செண்டரில் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. மொத்தம் 11 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த திருவிழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன், சுகாதார ஆணையத்தின் வழிமுறைப்படி நடைபெறும்.

வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க

இந்த திருவிழாவில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், சவுதி அரேபியா, லெபனான், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் கலை, கலாசாரம், அறிவியல் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

இளம் தலைமுறையினர் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க இந்த திருவிழா முக்கியமான பங்களிப்பை வகிக்கும். இதன் மூலம் சிறப்பான எதிர்காலத்தை அமீரகம் அடைய உதவும். ஒவ்வொரு சிந்தனைகளையும், கருத்துக்களையும், கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்தக்கூடிய வகையில் இந்த திருவிழா இருக்கும்.

அமீரகம் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக நடைபெறும் முக்கிய விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. வனக்கோவிலில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட வினோத திருவிழா
தா.பழூர் அருகே வனக்கோவிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத திருவிழா கடந்த 7 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது. இதில் பக்தர்கள் ஆடுகள் பலியிட்டு, நேர்த்திக்கடனாக வீச்சரிவாள் செலுத்தி வழிபட்டனர்.
2. தூய மங்கள அன்னை ஆலய திருவிழாவையொட்டி தேர்பவனி
தூய மங்கள அன்னை ஆலய திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது.
3. திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
செந்துறை அருகே திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
4. தூய மங்கள அன்னை ஆலய திருவிழா
தூய மங்கள அன்னை ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது.
5. தங்க கவசத்தில் முத்துமாரியம்மன் உலா
தாயமங்கலம் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி தங்க கவசத்தில் முத்துமாரியம்மன் திருவீதி உலா வந்தார்.