சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - 11 பேர் பலி


சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - 11 பேர் பலி
x
தினத்தந்தி 9 Jun 2021 9:37 AM GMT (Updated: 9 Jun 2021 9:37 AM GMT)

சிரியா மீடு இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

டமாஸ்கஸ்:

உள்நாட்டு போரால் பேரழிவை சந்தித்துள்ள சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிழவி வருகிறது. மேலும், இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஈரான் புரட்சிப்படை பிரிவினர், வெளிநாட்டு போராளிகளும் பலர் பதுங்கியுள்ளனர். இவர்களுக்கு சிரியா படையினர் ஆதரவு அளித்து வருகின்றனர். 

இவர்கள் சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை அழிக்க இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் அவ்வப்போது விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு.

இந்நிலையில், சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் மாகாணத்தின் ஹோம்ஸ் நகரத்தில் உள்ள ஹிர்பெட் அல் டின் என்ற கிராமத்தில் உள்ள இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர் இன்று அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த பகுதியில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தளங்களும் செயல்பட்டுவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் சிரிய ராணுவத்தினர் 7 பேர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் 4 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஆனால், தங்கள் நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் வான்வெளித்தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ள சிரிய அரசு இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story