உலக செய்திகள்

நாடாளுமன்றத்தில் புகுந்த எலி...! பெண் எம்.பி.க்கள் அலறல் கூட்டம் ஒத்திவைப்பு + "||" + Watch: Politicians Scramble To Their Feet As Rat Enters Parliament In Spain

நாடாளுமன்றத்தில் புகுந்த எலி...! பெண் எம்.பி.க்கள் அலறல் கூட்டம் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் புகுந்த எலி...! பெண் எம்.பி.க்கள் அலறல் கூட்டம் ஒத்திவைப்பு
ஸ்பெயின் நாட்டின் அந்தலுசியன் நாடாளுமன்றத்தில் எலி புகுந்து ஓடியதால் எம்.பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 அந்தலுசியன்

ஸ்பெயின் நாட்டின்   அந்தலுசியன்  நாடாளுமன்ற கூட்டம்  நேற்று நடந்து கொண்டு இருந்தது. எம்.பி.க்கள் சுசானா டயஸை செனட்டராக  நியமிக்க கோரும் ஒரு முக்கியமான பிரச்சினையில் வாக்களிக்க தயாராகி கொண்டு இருந்தனர்.

அப்போது எலி ஒன்று எம்.பிக்கள் காலில் ஏறி அங்கும் இங்கும்  ஓடியது. இதனால் பெண் எம்.பிக்கள் கதறியபடி ஓடினர். சிலர் கத்தி கூச்சலிட்டவாறு வெளியே ஓடினர்.இதை தொடர்ந்து  நாடாளுமன்ற கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பின்னர் எலி ஒருவாராக வெளியேற்றப்பட்டதும், நாடாளுமன்ற நடவடிக்கைகள் இயல்பாகவே மீண்டும் தொடங்கின.எம்.பிக்கள் மீண்டும் கூடி, அந்தலுசியன்  தன்னியக்க சமூகத்தின் செனட்டராக பெர்னாண்டோ லோபஸ் கிலுக்கு பதிலாக சுசானா டயஸை தேர்ந்து எடுத்தனர்  .

நாடாளுமன்றத்தில் எலி புகுந்து ஏற்படுத்திய களேபர வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
தொடர்புடைய செய்திகள்

1. மனிதர்களைப் போல பற்கள்,செம்மறி ஆட்டைப் போன்ற தலை மீனவர் வலையில் சிக்கிய அதிசயமீன்
மீனின் தலை செம்மறியாட்டு தலையை ஒத்திருப்பதால் ஷீப்ஸ்ஹெட் (ஆட்டுதலை)என பெயரைப் பெற்றது.
2. நவீன வசதிகளுடன் உலகில் 196 அடி ஆழம் உள்ள டீப் டைவ் துபாய் நீச்சல் குளம் திறப்பு
நவீன வசதிகளுடன் உலகில் அதிகம் ஆழம் கொண்ட 196 அடி ஆழ டீப் டைவ் துபாய் நீச்சல் குளம் திறக்கப்பட்டு உள்ளது.
3. உலகிலேயே மிகவும் குள்ளமான பசு ; ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண கூடும் மக்கள்
வங்காள தேசத்தில், 51 செ.மீ., உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண வருகின்றனர்.
4. விருந்தில் ஆட்டுக்கறி இல்லை: கோபத்தில் நிச்சயித்த பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்த மணமகன்
திருமணத்தின் போது உறவினர்களுக்கு ஆட்டுக்கறி விருந்து போடாததால் ஆத்திரம் அடைந்த மணமகன், மணப்பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
5. 28 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம் 4 நிமிட வீடியோ
சீனாவில் 28 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம் அதுகுறித்து விளக்கும் 4 நிமிட வீடியோ