ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று ஆலோசனை


ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 16 Aug 2021 5:06 AM IST (Updated: 16 Aug 2021 5:06 AM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று ஆலோசனை நடைபெற்கிறது.

ஜெனீவா,

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.  இதனை பயன்படுத்தி தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபூலை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் துணை அதிபர் அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இடைக்கால அதிபராக அலி அகமது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில் ஏற்பட்டுள்ள சூழலில், அந்நாட்டில் நிலவும் சூழல் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 10 மணிக்கு துவங்கவுள்ள இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குடாரெஸ் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story