ஜப்பானில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி


ஜப்பானில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி
x
தினத்தந்தி 10 Dec 2021 1:52 PM GMT (Updated: 10 Dec 2021 1:52 PM GMT)

ஜப்பானில் புதிதாக 8 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதியாகியிருக்கிறது.

டோக்கியோ

‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. 

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் வேகமாக பரவுகிறது. . இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ‘ஒமைக்ரான்’ வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் ஜப்பானில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் அதிகரித்து வருகிறது. , ஜப்பானில் புதிதாக 8 பேருக்கு இந்த ஒமைக்ரான்’ வைரஸ் தொற்று உறுதியாகியிருக்கிறது,இதனால் ஜப்பானில் ‘ஒமைக்ரான்’ வைரஸ்  பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

Next Story