கொரோனா பாதிப்புகள்; நியூயார்க்கில் முக கவசம் கட்டாயம்


கொரோனா பாதிப்புகள்; நியூயார்க்கில் முக கவசம் கட்டாயம்
x
தினத்தந்தி 11 Dec 2021 12:41 AM GMT (Updated: 11 Dec 2021 12:41 AM GMT)

நியூயார்க்கில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அனைத்து வர்த்தக நிறுவனங்களும் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.  இந்த நிலையில், நியூயார்க்கில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அனைத்து வர்த்தக நிறுவனங்களும் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அப்படி இல்லையெனில், தங்களுடைய பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கவர்னர் கேத்தி ஹோச்சுல் அறிவித்து உள்ளார்.  நியூயார்க் நகர மக்களின் நலனை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.
Next Story