உலக செய்திகள்

5 முதல்11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட சுவிட்சர்லாந்து ஒப்புதல் + "||" + Switzerland Approves Covid Vaccination Of Children Aged Between 5 And 11

5 முதல்11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட சுவிட்சர்லாந்து ஒப்புதல்

5 முதல்11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட சுவிட்சர்லாந்து ஒப்புதல்
5 முதல்11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட சுவிட்சர்லாந்து ஒப்புதல் அளித்துள்ளது.
ஜெனிவா, 

ஸ்விட்சர்லாந்தில் 5 முதல்11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர்-பயோன்டெக்கின் காமிர்னடி தடுப்பூசி போட சுவிஸ் மருந்து நிறுவனமான ஸ்விஸ்மெடிக் ஒப்புதல் அளித்துள்ளது. 5-11 வயது உடையவர்களுக்கு இந்த  தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை மருத்துவ பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இளம் பருவத்தினருக்கு தடுப்பூசியின் பக்க விளைவுகள் பெரியவர்களைக் காட்டிலும் குறைவாகவே நிகழ்கின்றன.  தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், செலுத்தப்பட்ட இடத்தில் வலி, சோர்வு, குறைவாக அடிக்கடி தலைவலி, மற்றும் மூட்டு வலி, போன்ற சாதாரண பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என்று அந்த நிறுவனம் கூறியது.

தற்போது வரை ஸ்விட்சர்லாந்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அங்கு காமிர்னடி மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

ஐரோப்பாவில் போர்ச்சுகல், இத்தாலி, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் தற்போது ஸ்விட்சர்லாந்தும் 5 முதல்11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
2. மெகா சிறப்பு முகாம்: தமிழகத்தில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் நேற்று மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 17.70 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
3. 1.29 கோடி தடுப்பூசிகள் செப்டம்பர் மாதத்தில் காலாவதியாகிறது மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
1.29 கோடி தடுப்பூசிகள் செப்டம்பர் மாதத்தில் காலாவதியாகிற நிலையில் விரைவில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
4. 1.4 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
மாநில சராசரியை விட தமிழகத்தில் 25 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, மேலும் 1.4 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் "49 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை" - அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் "49 லட்சம் பேர் முதல் தவனை தடுப்பூசியே செலுத்திக்கொள்ளவில்லை என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.