ஒமைக்ரான் கொரோனா பரவல் விகிதம் அதிகரிக்கும் - உலக சுகாதார அமைப்பு தகவல்


ஒமைக்ரான் கொரோனா பரவல் விகிதம் அதிகரிக்கும் - உலக சுகாதார அமைப்பு தகவல்
x
தினத்தந்தி 13 Dec 2021 3:50 AM GMT (Updated: 13 Dec 2021 3:50 AM GMT)

ஒமைக்ரான் கொரோனா பரவல் விகிதம் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

ஜெனீவா,

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து படிப்படியாக விலகி வருகிறது. இந்த நிலையில், தற்போது கொரோனாவின்  மற்றொரு பிரிவான ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் தாக்குகிறது. ஒமைக்ரான் தற்போது பல நாடுகளில் பரவி வருகிறது.

இந்நிலையில், வேகமாகப்பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா மற்றும் பிற வகை கொரோனா வைரசுடன் ஒப்பிடும் போது இந்த ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வகை வைரசுக்கான அறிகுறிகள் பிற வைரசுகளின் அறிகுறிகளுடன் மாற்றுபட்டவை என்பதை உறுதி செய்ய எந்த வித தகவல்களும் இல்லை.

மேலும் ஓமைக்ரான் தொற்று தடுப்பூசியின் செயல் திறனை குறைக்கும் என்பதால் ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் விகிதம் அதிகரிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒமைக்ரான் எந்த அளவு தொற்றில் வீரியமானது, தீவிரமான உடல்நல பாதிப்பை ஏற்படுத்துமா, சிகிச்சைக்கு எவ்வாறு கட்டுப்படும், என்பதை அறிய சில காலங்கள் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளது.

Next Story