ஆப்கானிஸ்தான்: மூடப்பட்ட கொரோனா மருத்துவமனைகளை விரைவில் திறப்போம் - தலீபான்கள்


ஆப்கானிஸ்தான்: மூடப்பட்ட கொரோனா மருத்துவமனைகளை விரைவில் திறப்போம் - தலீபான்கள்
x
தினத்தந்தி 14 Dec 2021 4:25 PM GMT (Updated: 14 Dec 2021 4:25 PM GMT)

ஆப்கானிஸ்தானில் மூடப்பட்ட கொரோனா மருத்துமனைகளை மீண்டும் திறப்போம் என்று தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.

காபுல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டுக்கு வழங்கி வந்த நிதியுதவியை பல்வேறு நாடுகள், அமைப்புகள் நிறுத்தின. 

நிதி உதவிகள் நிறுத்தப்பட்டதால் அந்நாட்டில் செயல்பட்டு வந்த மொத்தமுள்ள 34 கொரோனா மருத்துமனைகளும் மூடப்பட்டன. கொரோனா பரிசோதனை உள்பட அனைத்து நடவடிக்கைகளும் தடைபட்டன. 

இதனால், ஆப்கானிஸ்தானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும், அந்நாட்டில் சுகாதார அமைப்பே சீர்குலையும் நிலைக்கு சென்றது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானுக்கு நிறுத்தப்பட்ட நிதி உதவியை பல்வேறு அமைப்புகள்/ நாடுகள் மீண்டும் வழங்கத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில், நிதி உதவிகள் மீண்டும் வரத்தொடங்கியதையடுத்து நாட்டில் மொத்தமுள்ள 34 கொரோனா மருத்துமனைகளும் விரைவில் திறக்கப்பட உள்ளதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story