துருக்கியில் தீ விபத்து; 4 வெளிநாட்டு குழந்தைகள் பலி


துருக்கியில் தீ விபத்து; 4 வெளிநாட்டு குழந்தைகள் பலி
x
தினத்தந்தி 14 Dec 2021 5:02 PM GMT (Updated: 14 Dec 2021 5:02 PM GMT)

துருக்கியில் 5 அடுக்கு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வெளிநாட்டு குழந்தைகள் பலியாகி உள்ளனர்.


இஸ்தான்புல்,

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் எசென்யுர்ட் மாவட்டத்தில் 5 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது.  இதன் அடித்தளத்தில், இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.  இந்த தீயானது அடுத்தடுத்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் 4 வெளிநாட்டு குழந்தைகள் பலியாகி உள்ளனர்.  2 பேர் காயமடைந்து உள்ளனர்.  அந்த குழந்தைகளின் தாயார் மற்றும் மற்றொரு குழந்தை மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.  இதுபற்றி நீதிமன்ற மற்றும் அரசு நிர்வாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


Next Story