அமெரிக்கா: ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்


அமெரிக்கா: ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
x
தினத்தந்தி 25 Dec 2021 4:40 AM GMT (Updated: 25 Dec 2021 4:40 AM GMT)

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டினர் அமெரிக்காவில் நுழைய அமெரிக்க அரசு தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

வாஷிங்டன்,

தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, லெசோதோ, சுவாசிலாந்து, மொசாம்பிக் மற்றும் மலாவி உள்ளிட்ட 8 ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருவோர் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை  இம்மாதம் 31-ந்தேதி முதல் நீக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மேற்கண்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டினர் அமெரிக்காவில் நுழைய கடந்த மாதம் 29-ந்தேதியிலிருந்து அமெரிக்க அரசு தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், இப்போது ஒமைக்ரான் குறித்தும், கொரோனா தடுப்பூசிகள் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக செயல்படும் விதம் குறித்தும் அறிந்து கொள்ள போதிய கால அவகாசம் கிடைத்தது. இதன் காரணமாக டிசம்பர் 31-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு பின் இந்த தடை உத்தரவு விலக்கி கொள்ளப்படுவதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கெவின் முனோஸ் தெரிவித்துள்ளார்.

Next Story