இங்கிலாந்தில் ஒமைக்ரான் பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது


இங்கிலாந்தில் ஒமைக்ரான் பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 25 Dec 2021 8:52 PM GMT (Updated: 25 Dec 2021 8:52 PM GMT)

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.


லண்டன், 

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அங்கு வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவுகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 186 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1 கோடியே 18 லட்சத்து 91 ஆயிரத்து 292 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 134 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் கொரோனா உயிரிழப்பு 1 லட்சத்து 47 ஆயிரத்து 857 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானும் இங்கிலாந்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று ஒரு நாளில் 23 ஆயிரத்து 179 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு ஒமைக்ரான் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 625 ஆக உயர்ந்துள்ளது.

Next Story