ஜப்பான்: கடும் பனிப்பொழிவு காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

கடும் பனிப்பொழிவு காரணமாக 100-க்கும் மேற்பட்ட ஜப்பான் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டோக்கியோ,
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் மோசமான வானிலை மற்றும் பனிப்பொழிவு இருப்பதன் காரணமாக அங்கு 100க்கும் மேற்பட்ட ஜப்பான் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் காலை 10 மணி வரை 35 விமானங்களை ரத்து செய்துள்ளது. இதனால் 1,810 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று விமான நிறுவனத்தின் செயல்பாட்டுப் பிரிவின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
அதே போன்று ஏ.என்.ஏ ஹோல்டிங்ஸ் நிறுவனம் மதியம் 1 மணி நிலவரப்படி 77 விமானங்களை நிறுத்தியது. இதனால் சுமார் 5,100 பயணிகளைப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குநர் யுடகா கிடஹாரா தெரிவித்தார்.
வடகிழக்கு ஜப்பானில் வானிலை நிலையற்றதாக இருப்பதால், மேலும் விமானங்கள் ரத்து செய்யப்படக்கூடும் என்று கிடஹாரா கூறினார்.
Related Tags :
Next Story