நவீன தொழில்நுட்ப வசதிகள் துணையுடன் வேலை செய்வது ஆபத்து - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை


நவீன தொழில்நுட்ப வசதிகள் துணையுடன் வேலை செய்வது ஆபத்து - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Feb 2022 10:53 PM GMT (Updated: 2 Feb 2022 10:53 PM GMT)

நவீன தொழில்நுட்ப வசதிகள் துணையுடன் வேலை செய்வது ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவா,

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகமெங்கும் பணிச்சூழலையே மாற்றி விட்டது. வீட்டில் இருந்து கொண்டு இணையதளம், இ-மெயில், தொலைபேசி போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி வேலை செய்வது ‘டெலிவொர்க்கிங்’ என அழைக்கப்படுகிறது.

இப்படி ‘டெலிவொர்க்கிங்’ முறையில் பணி செய்வதால் முதுகுவலி, மனநல பாதிப்பு, சமூக தனிமை, நிலையான மன உளைச்சல், தனிமை போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

தொலைதூரத்தில் இருந்து கணினியில் நீண்ட நேரம் வேலை செய்வது தசையில் காயங்கள், கண் அழுத்தம் ஏற்படும் என்றும் எச்சரித்து இருக்கிறது. தனிநபர்களின் பணி விருப்பங்களை பொறுத்து மனநிலை பாதிப்பு அபாயங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டாம்.

வீட்டில் இருந்து வேலை செய்வதால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு இடையே அதிக எண்ணிக்கையிலான மோதல்கள் ஏற்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வு காட்டுகிறது.

Next Story