இங்கிலாந்தில் 1.80 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 Feb 2022 11:49 PM IST (Updated: 9 Feb 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 276 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 68,214 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,80,00,119  ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 276 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 55 லட்சத்து 96 ஆயிரத்து 741 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 22,44,425 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1 More update

Next Story