அமெரிக்காவில் உயரும் பலி எண்ணிக்கை: 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவையா?


அமெரிக்காவில் உயரும் பலி எண்ணிக்கை:  4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவையா?
x
தினத்தந்தி 10 Feb 2022 6:14 AM GMT (Updated: 10 Feb 2022 6:14 AM GMT)

ஒமைக்ரானை எதிர்த்து போராட அமெரிக்காவில் 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் என வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி வுசி கூறியுள்ளார்.

ஜெனீவா,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டாக உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.  புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இது ஒரு பக்கம் மிரட்டி வரும் நிலையில்,  அமெரிக்காவில் கொரோனாவால்  அமெரிக்காவில் 1 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவை முழுமையாக அகற்ற 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி வுசி கூறியதாவது:-

கொரோனா உருமாறிய வைரசான ஒமைக்ரானை எதிர்த்து போராட அமெரிக்காவில் 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம். பூஸ்டர் தவணை தடுப்பூசி என்பது வயது மற்றும் பாதிப்பு அடிப்படைகளில் இருக்கலாம். 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி போடுவது வெளிப்படையாகவே பின்பற்றப்படும்.

6 மாதங்கள் முதல் 2 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் 21 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி சோதனைகள் பைசர் மருத்துவ நிறுவனத்தால் நடத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story