ஆப்கானிஸ்தானின் நிலைமை அண்டை நாடுகளுக்கு கவலையளிக்கிறது: வெளியுறவுத் துறை இணை அமைச்சர்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Feb 2022 4:25 PM GMT (Updated: 11 Feb 2022 4:25 PM GMT)

ஆப்கானிஸ்தானின் நிலைமை அண்டை நாடுகளுக்கு கவலையை அளிப்பதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளீதரன் தெரிவித்தார்.

புது டெல்லி, 

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை, அண்டை நாடுகளுக்கு கவலையை அளிப்பதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளீதரன் தெரிவித்தார்.

இதுகுறித்து மக்களவையில் அவர் கூறும்போது, மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. உச்சிமாநாட்டில், மனிதாபிமான உதவி, பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல், பாதுகாப்பு உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் குறித்த பிரச்சினைகள் அண்டை நாடுகளுக்கு இயற்கையாகவே கவலையை அளிப்பதாக பல நாடுகளின் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளும் ஆப்கானிஸ்தான் பிரச்சனை தொடர்பாக ஒரு குழுவை உருவாக்க முடிவு செய்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story