இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்துசாட்சியம் அளித்த பெண் வக்கீலுக்கு சர்வதேச அமைப்புகள் ஆதரவு


இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்துசாட்சியம் அளித்த பெண் வக்கீலுக்கு சர்வதேச அமைப்புகள் ஆதரவு
x
தினத்தந்தி 14 Feb 2022 7:29 PM GMT (Updated: 14 Feb 2022 7:29 PM GMT)

இலங்கையைச் சேர்ந்த பிரபல பெண் மனித உரிமை வக்கீல் அம்பிகா சற்குணநாதன். இவர், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 27-ந் தேதி சாட்சியம் அளித்தார்.

அதில் இலங்கையில் மனித உரிமை நிலை குறித்து தெரிவித்ததுடன், இவ்விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் செய்ய வேண்டியவை குறித்த பரிந்துரைகளையும் வெளியிட்டார்.

இதுதொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் கடந்த 4-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், அம்பிகா சற்குணநாதனின் சாட்சியம் தவறாக வழிநடத்துவதாகவும், விடுதலைப்புலிகளின் பிரசாரத்தைப் போல சமூகங்கள் இடையே வெறுப்புணர்வை தூண்டுவதாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த அறிக்கைக்கு, சர்வதேச பொது மன்னிப்பு சபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட 8 சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அவை வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘இலங்கை அரசின் கருத்து, அம்பிகா சற்குணநாதனை துன்புறுத்துவதாகவும், அச்சுறுத்துவதாகவும் உள்ளது’ என தெரிவித்துள்ளன.

மேலும் இலங்கை நிலை பற்றி துல்லியமாக சாட்சியம் அளித்த, மதிப்புமிக்க, துணிச்சலான மனித உரிமைகள் பாதுகாவலர் அம்பிகா சற்குணநாதனுக்கு நாங்கள் முழுமையாக ஆதரவு அளிக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Next Story