மியான்மரில் ராணுவ விமானம் ஏரியில் விழுந்து விபத்து - விமானி உயிரிழப்பு


மியான்மரில் ராணுவ விமானம் ஏரியில் விழுந்து விபத்து - விமானி உயிரிழப்பு
x
தினத்தந்தி 17 Feb 2022 7:35 AM GMT (Updated: 17 Feb 2022 7:35 AM GMT)

மியான்மரில் எந்திர கோளாறால் ராணுவ விமானம் ஏரியில் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தார்.

நோபிடாவ்,

மியான்மர் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சகாயிங் பிராந்தியத்தில் தடா-யு என்கிற நகரில் விமானப்படை தளம் ஒன்று உள்ளது. இங்கிருந்து நேற்று காலை போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. 

விமானத்தில் ஒரு விமானி மட்டும் இருந்தார். நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்குள்ள ஒரு ஏரியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானார்.

Next Story