தென்கொரியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு


தென்கொரியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2022 3:29 PM IST (Updated: 18 Feb 2022 3:29 PM IST)
t-max-icont-min-icon

தென்கொரியாவில் ஒமைக்ரான் வகை கொரோனாவின் ஆதிக்கம் காரணமாக தொற்று பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருகிறது.

சியோல் , 

தென்கொரியாவில் ஒமைக்ரான் வகை கொரோனாவின் ஆதிக்கம் காரணமாக தொற்று பாதிப்பு  அதிக அளவில் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,09,831- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பரவத்தொடங்கியதில் இருந்து அந்நாட்டில் ஏற்படும் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். 

நேற்று 93,135 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு லட்சத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. தென்கொரியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 55 ஆயிரத்து 806- ஆகும். கொரோனா பாதிப்புக்கு மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். 
1 More update

Next Story