யூனிஸ் புயல்: இங்கிலாந்தில் சிவப்பு எச்சரிக்கை


யூனிஸ் புயல்: இங்கிலாந்தில் சிவப்பு எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 Feb 2022 4:41 PM GMT (Updated: 18 Feb 2022 4:41 PM GMT)

லண்டன் மற்றும் இங்கிலாந்தின் கிழக்குப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

யூனிஸ் புயல் இங்கிலாந்தைத் தாக்கியதால் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  அங்கு கடந்த 32 வருடங்களில் வீசும் மிக மோசமான புயல் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தின் வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  யூனிஸ் புயல் காரணமாக  ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் வணிகங்கள் மூடப்பட்டன.அப்பகுதிகளுக்கான பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. விமான சேவையும்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

லண்டன் மற்றும் இங்கிலாந்தின் கிழக்குப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் நெதர்லாந்து, பிரான்சு, ஜெர்மனி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story