இந்திய மீனவர்கள் 31 பேரை கைது செய்தது பாகிஸ்தான்


இந்திய மீனவர்கள் 31 பேரை கைது செய்தது பாகிஸ்தான்
x
தினத்தந்தி 20 Feb 2022 2:35 PM GMT (Updated: 20 Feb 2022 2:35 PM GMT)

இந்திய மீனவர்கள் 31 பேரையும் அவர்களின் படகையும் பாகிஸ்தான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

இஸ்லமபாத்,

இந்திய மீனவர்கள் 31 பேரை கைது செய்துள்ள பாகிஸ்தான் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. க்பாகிஸ்தானின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய படகை சிறைபிடித்ததாகவும் அதில் இருந்த 31 மீனவர்களும் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் பாகிஸ்தானின்  பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கரச்சி துறைமுகம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஐநா சட்ட நடைமுறைகள் பின்பற்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. 

அரபிக்கடல் பகுதியில் எல்லை தாண்டி வருவதாக பாகிஸ்தானும் இந்தியாவும் அடிக்கடி இது போன்ற கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  இந்த ஆண்டு துவக்கத்தில் இரு நாடுகளும் பகிர்ந்து கொண்ட கைதிகளின் பட்டியலின் படி, பாகிஸ்தானில் 628 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இதில் 577 பேர் மீனவர்கள் ஆவர். 


Next Story