ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த நபரை உயிரோடு திண்ற முதலை


ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த நபரை உயிரோடு திண்ற முதலை
x
தினத்தந்தி 22 Feb 2022 3:16 PM GMT (Updated: 22 Feb 2022 3:16 PM GMT)

ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த நபரை முதலை ஒன்று உயிரோடு திண்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜகார்தா,

இந்தோனேசிய நாட்டின் தெற்கு பகுதியில் உள்ல கலிமந்தன் மாகாணத்தை சேர்ந்தவர் லூதர் (51 வயது). இவர் கடந்த 15-ம் தேதி தான் வசித்து வந்த பகுதிக்கு அருகே உள்ள காட்டில் பாமாயில் எண்ணை தரும் மரத்தின் இலைகளை தனது நண்பர்களுடன் இணைந்து சேகரித்தார்.

அதன்பின்னர், அந்த காட்டின் அருகே ஓடும் பிபடு ஆற்றில் லூதர் குளித்தார். நண்பர்கள் அனைவரும் ஆற்றின் அருகே இலைகளை சேகரித்துக்கொண்டிருந்தபோது லூதர் மட்டும் தனியாக ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, அந்த ஆற்றில் இருந்த 13 அடி நீளமுடிய முதலை ஒன்று லூதரை தண்ணீருக்குள் இழுத்து சென்றது. முதலை தன்னை கடிப்பதை உணர்ந்த லூதர் கத்தி கூச்சல் எழுப்பியுள்ளார். அவரது சத்தத்தை கேட்ட நண்பர்கள் அங்கு ஓடி வந்து முதலையை விரட்ட முயற்சித்தனர்.

ஆனால், அந்த முதலை லூதரை விடாமல் கடித்து திண்றது. அவரை ஆற்றுக்குள் இழுந்து சென்றது. லூதரின் நண்பர்கள் எவ்வளவோ முயற்சித்தபோதும் முதலை அவரை கடித்து திண்றது. இதனால், சிறிது நேரத்தில் ஆற்றின் மேற்பரப்பில் ரத்தம் வெள்ளமானது. 

இந்த சம்பவம் குறித்து மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் முதலையால் இழுத்து செல்லப்பட்ட லூதரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால், முதலை லூதரை கடித்து கொன்றதால் அவரிடன் உடல் பாகங்கள் கிடைக்குமா? என்ற கோணத்திலும் மீட்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.



ஆற்றின் அந்த பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளதாகவும், அங்கு குளிக்க வேண்டாம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தபோதும் அதை மீறி லூதர் அங்கு குளிக்க ஆற்றில் இறங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story