ரஷ்ய தாக்குதல்: தெற்கு உக்ரைன் பகுதியில் 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல்


ரஷ்ய தாக்குதல்: தெற்கு உக்ரைன் பகுதியில் 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல்
x
தினத்தந்தி 24 Feb 2022 5:49 PM GMT (Updated: 24 Feb 2022 5:49 PM GMT)

ரஷ்ய தாக்குதலில் தெற்கு உக்ரைன் பகுதியில் 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன்,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வழி, கடல்வழி மூலம் உக்ரைன் மீது ரஷியா மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படைகள் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற நெருங்கி வருகிறது.

இந்த நிலையில், ரஷ்ய தாக்குதலில் தெற்கு உக்ரைன் பகுதியில் 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாள் தாக்குதலில் 13 பொதுமக்கள், 9 உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெற்கு உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மேலும் ரஷ்யப் படை கிரிமியாவிலிருந்து பிரதான நிலப்பகுதி மற்றும் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே உள்ள இடங்களைக் கைப்பற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story