உக்ரைன் மீது 2-வது நாளாக ரஷியா தாக்குதல் :பதுங்கு குழியில் தமிழக மாணவர்கள் தஞ்சம்


உக்ரைன் மீது 2-வது நாளாக ரஷியா தாக்குதல் :பதுங்கு குழியில் தமிழக மாணவர்கள் தஞ்சம்
x
தினத்தந்தி 25 Feb 2022 4:58 AM GMT (Updated: 25 Feb 2022 5:06 AM GMT)

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள வினிட்சியா பல்கலைக்கழக தமிழக மாணவர்கள், சுரங்க அறைகளில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லண்டன்

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.

இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார்.  உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.  தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் நேற்று உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து ரஷிய படைகளில் உக்ரைனின் பலவேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் வடக்கு பகுதிக்குள்  ரஷிய படைகள் நுழைந்து உள்ளன.முன்னதாக பலாரஸ் நாட்டில் குவிக்கபட்டு இருந்த படைகள்  கீவ் நகருக்குள் நுழைந்து உள்ளன.

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய படைகள் இன்று 2வது நாளாக  தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்குள்ள தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள வினிட்சியா பல்கலைக்கழக தமிழக மாணவர்கள், சுரங்க அறைகளில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து பலகலைக்கழக மாணவர் ஒருவர் கூறும் போது:

பலகலைக்கழகத்தில் சுரங்க பாதைகளில் பாதுகாப்பாக இருக்குமாறு கூறி உள்ளனர்.  பல்கலைக்கழக  சுரங்க அறையில்  மாணவர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.  அத்தியாவசிய தேவைகள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இன்னும் சிலநாட்களே தாக்குபிடிக்க முடியும். இந்திய தூதரகத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள் என கூறினார்.

Next Story