அமெரிக்கா எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை -பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் கருத்து


அமெரிக்கா எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை -பாகிஸ்தான்  ஜனாதிபதி  ஆரிப் கருத்து
x
தினத்தந்தி 25 Feb 2022 10:12 AM GMT (Updated: 25 Feb 2022 10:12 AM GMT)

கடந்த காலங்களிலிருந்து அமெரிக்கா எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் கருத்து தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்

ரஷியா - உக்ரைன் போர் குறித்து பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கூறியதாவது:-

கடந்த காலங்களில் இருந்து அமெரிக்கா எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. மேலும் இன்னொரு குழியில் விழுந்து உள்ளது. வியட்நாம் போரிலிருந்து அமெரிக்கா பாடம் கற்றுக்கொண்டிருக்கும் என்றும், மற்றொரு வலையில் விழாது என்றும் நான் தவறாக நம்பினேன் என கூறி உள்ளார்.

இதனை பாகிஸ்தான் பத்திரிகை டான் தெரிவித்து உள்ளது.

Next Story