அதிபர் ஜெலன்ஸ்கியை குறிவைக்கும் ரஷியா; உக்ரைன் ராணுவத்தை வைத்தே தீர்த்துக்கட்ட திட்டம்


அதிபர் ஜெலன்ஸ்கியை குறிவைக்கும் ரஷியா; உக்ரைன் ராணுவத்தை வைத்தே தீர்த்துக்கட்ட திட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2022 8:07 AM GMT (Updated: 26 Feb 2022 9:15 AM GMT)

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை குறிவைக்கும் ரஷியா; உக்ரைன் ராணுவத்தை வைத்தே தீர்த்துக்கட்ட முன்னாள் உளவாளியான புதின் திட்டமிட்டு உள்ளார்.

நியூயார்க்

ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் மூண்டிருப்பது உலகை அதிர வைத்துள்ளது.

இந்த போர் பற்றிய உண்மைகள் கிறங்கடிக்கும். ஆமாம், உக்ரைனின் ஆயுதப்படைகள் ரஷியாவுக்கு எதிராக எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒப்பிட்டு அறிகிற போது, கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது.

உக்ரைனைவிட ரஷியா ஆயுதப்படையினரின் எண்ணிக்கை அதிகமோ அதிகம்.

ஆனால் ஒன்று, உக்ரைனிடம் இருந்து ரஷியாவுக்கு வருகிற ராணுவ சவால் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும்.

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு ரஷியா 1990-களில் பிரிந்த செசன்யா, 2008-ல் ஜார்ஜியா ஆகியவற்றுக்கு எதிராக ரஷியா போரிட்டபோது எதிர் கொண்டதை விட கடினமான சவாலை உக்ரைனிடம் இருந்து சந்திக்க வேண்டியது வரும்.

ஏனென்றால் உக்ரைனில் வயது வந்த பெரும்பாலான ஆண்கள் ராணுவப்பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

இதனால்தான் உக்ரைனிடம் இருந்து ரஷியா ஒரு நீடித்த எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று போர் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

உக்ரைன் நாட்டு அதிபர் விளாடிமர் ஜெலன்ஸ்கி அந்நாட்டு ராணுவமே எதிர்க்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி ஜெலன்ஸ்கியை அந்நாட்டு ராணுவமே எதிர்த்து, ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று ரஷியா அதிபர் புதின் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ரஷிய அதிபர் புதின் வைத்துள்ள கோரிக்கையில், உக்ரைன் அரசை உக்ரைன் ராணுவம் கவிழ்க்க வேண்டும்.

ரஷ்யாவின் பாதுகாப்புக் குழுவுடனான தொலைக்காட்சி சந்திப்பின் போது பேசிய விளாடிமர் புதின் கூறியதாவது:-

உங்கள் நாட்டை ஒரு நியோ நாசி ஆண்டு கொண்டு இருக்கிறார். அவர் உக்ரைன் வலதுசாரி. அவரை ஆதரிக்காதீர்கள். அவர்கள் உங்கள் குழந்தைகளை நாசம் செய்து விடுவார்கள். உங்கள் வீட்டு பெண்கள், முதியவர்களை அவர்களால் காப்பாற்ற முடியாது. அதனால் ராணுவமே அங்கு ஆட்சியை கைப்பற்றி, அரசை கவிழ்க்க வேண்டும். உங்கள் கையில் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

அங்கு ராணுவ ஆட்சி நடந்தால் ரஷிய அரசு பேச்சுவார்த்தை நடத்தும். நாம் ஒரு விதமான ஒப்பந்தத்திற்கும் வர முடியும். உக்ரைனில் இருக்கும் ரஷிய ராணுவம்  சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் மிகவும் தைரியமாக, செயல்பட்டு வருகிறார்கள். ரஷியாவின் உயர் மட்ட கமிட்டியை நாங்கள் உக்ரைனுக்குள் அனுப்ப தயார். அங்கு உக்ரைனுடன் பேச தயார். ஆனால் உக்ரைன் அரசு எங்களிடம் பேசுமா என்று தெரியாது.

உக்ரைனில் ராணுவ ஆட்சி நடந்தால் பேச்சுவார்த்தை நடத்த, ஒப்பந்தம் செய்ய வசதியாக இருக்கும், என்று புடின் குறிப்பிட்டு இருக்கிறார். உக்ரைன் அரசை கவிழ்த்து அந்நாட்டு அதிபர்  சொலென்ஸ்கியை அந்நாட்டு ராணுவத்தை வைத்தே கொலை செய்ய புதின் திட்டமிட்டு உள்ளார். உக்ரைன் ராணுவம் - அரசு இடையே பிரிவினையை ஏற்படுத்த புதின் திட்டம் போட்டு இருக்கிறார்.

இதற்கு உக்ரைன் ராணுவம் அடிபணிந்தால் பெரிய பாதிப்பில் முடியும். ஏற்கனவே உக்ரைனில் ரஷியா முழுவதும் உளவாளிகள் உள்ளனர். அவர்கள் ஆட்சியை கவிழ்க்க உள்ளே இருந்து முயன்று வருகிறார்கள். ராணுவத்திற்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளே இருந்து ஆட்சியை கவிழ்த்து, அதன்பின் உக்ரைனை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் ரஷியா கொண்டு வரும். அல்லது பொம்மை அரசை அங்கு ரஷியா நிறுவும் என்பதை மறக்க வேண்டாம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில்  தலைநகர் கீவ் நகரத்தை விட்டு வெளியேடுமாறு அமெரிக்கா  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி  கேட்டு கொண்டு உள்ளது. ஆனால் இதனை அவர் நிராகரித்துள்ளார். உக்ரைன் அதிபர் அமெரிக்காவுக்கு அளித்துள்ள பதிலில், “ இங்கு சண்டை நடைபெற்று வருகிறது. எனக்கு ஆயுதங்களே தேவை. நான் தப்பிப்பது முக்கியமில்லை” என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவின் மூத்த உளவுத்துறை அதிகாரி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 

Next Story