ஹங்கேரியிலிருந்து இருந்து 240 இந்தியர்களுடன் 6-வது விமானம் டெல்லி புறப்பட்டது...!


ஹங்கேரியிலிருந்து இருந்து 240 இந்தியர்களுடன் 6-வது விமானம் டெல்லி புறப்பட்டது...!
x
தினத்தந்தி 28 Feb 2022 12:31 PM IST (Updated: 28 Feb 2022 12:31 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் இருந்து இதுவரை 1,156 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.

புதுடெல்லி, 

ரஷியாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். 

குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அதன்படி 5 சிறப்பு விமானங்கள் உக்ரைனில் இருந்து டெல்லி வந்தடைந்துள்ள.இதுவரை உக்ரைனில் இருந்து1,156 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். 

இந்நிலையில், ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் ஹங்கேரி தலைநகர் பூடாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 6-வது சிறப்பு விமானம் டெல்லிக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானம் இன்று மாலை டெல்லி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 More update

Next Story