துப்பாக்கியுடன் போஸ்கொடுத்த உக்ரைன் அழகி உருக்கமான வேண்டுகோள்


துப்பாக்கியுடன் போஸ்கொடுத்த உக்ரைன் அழகி உருக்கமான வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 March 2022 10:01 AM GMT (Updated: 2 March 2022 10:01 AM GMT)

துப்பாக்கியுடன் போஸ்கொடுத்த உக்ரைன் அழகி நான் இராணுவத்தில் இல்லை என கூறி உள்ளார்.

லண்டன்

உக்ரைன் நாட்டில் ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராக மக்கள் போரிட வருமாறு அந்நாட்டு அதிபர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், 2015-ல்  மிஸ் உக்ரைன்  பட்டம் வென்ற அனஸ்டாசியா லென்னா கையில் துப்பாக்கி உடன் ரஷியாவிற்கு எதிரான போரில் கலந்துகொள்வதாக சில புகைப்படங்கள்  ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிப்ரவரி 22-ம தேதி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனஸ்டாசியா லென்னா, standwithukraine எனும் ஹேஸ்டாக் உடன் கையில் துப்பாக்கி உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்

அனஸ்டாசியா கையில் வைத்திருக்கும் துப்பாக்கி ஏர்சாப்ட் எனும் ராணுவ உருவகப்படுத்துதல் விளையாட்டைச் சேர்ந்தது. ராணுவ சண்டைகளை போன்ற போலியான போரை விளையாடும் போது, உண்மையான ஆயுதங்களை போன்ற பிரதிகள் பயன்படுத்தப்படும். அந்த மாதரியான துப்பாக்கியே அவரது கையில் உள்ளது. 

இதுகுறித்து அவர் த்னது இன்ஸ்டாகிராமில் கூறி இருப்பதாவது:-

நான் இராணுவத்தில் இல்லை, ஒரு பெண், சாதாரண மனிதர், என் நாட்டிலுள்ள எல்லா மக்களையும் போலவே ஒரு நபர். நான் பல ஆண்டுகளாக ஏர்சாப்ட் பிளேயராக இருக்கிறேன்.  ஏர்சாப்ட் என்றால் என்ன என்பதை நீங்கள் கூகுள் செய்து பார்க்கலாம்.

உக்ரேனிய பெண்கள் வலிமையான, நம்பிக்கையான மற்றும் சக்திவாய்ந்தவள் என்பதைக் காட்டுவதைத் தவிர நான் எந்த பிரசாரத்தையும் செய்யவில்லை.

எனது நாட்டிற்கான அனைவரது  ஆதரவையும் நான் பாராட்டுகிறேன், உக்ரைனில் உள்ள அனைத்து மக்களும் ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒவ்வொரு நாளும் போராடுகிறோம்.

வெற்றி பெறுவோம்!

நான் கீவில் பிறந்து வாழ்கிறேன். இது என்னுடைய நகரம். உக்ரைன் எனது நாடு.

நான் உலக மக்கள் அனைவரிடமும் கேட்கிறேன்!
உக்ரைனில் போரை நிறுத்த  சொல்லிங்கள் ! மக்கள் யாரும் இறக்கக்கூடாது!

ரஷிய ஆக்கிரமிப்பை நிறுத்த உக்ரேனிய மக்களுக்கு உதவுங்கள் என கூறி உள்ளார்.



Next Story