பாகிஸ்தான்: இந்திய எல்லையை ஒட்டிய சியால்கோட் ராணுவ கிடங்கில் பயங்கர வெடிவிபத்து!


Image Source: Internet
x
Image Source: Internet
தினத்தந்தி 20 March 2022 10:04 AM (Updated: 20 March 2022 10:04 AM)
t-max-icont-min-icon

இது பாகிஸ்தானில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான இராணுவக் கண்டோன்மென்ட்களில் ஒன்றாகும்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் இந்திய எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட்  ராணுவ தளவாட சேமிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது பாகிஸ்தானில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான இராணுவக் கண்டோன்மென்ட்களில் ஒன்றாகும்.அங்குள்ள வெடிமருந்துகள் சேமிக்கும் பகுதியில்தான் வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து, அப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதனால் அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்டு கொண்டே இருந்தது என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்தன.
1 More update

Next Story