உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் 100 கூலிப்படையினர் பலி

உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் 100 கூலிப்படையினர் பலி
x
தினத்தந்தி 20 March 2022 6:57 PM GMT (Updated: 20 March 2022 6:57 PM GMT)

உக்ரைனில் ஜைட்டோமைர் பிராந்தியத்தில் சிறப்பு நடவடிக்கை படைகளுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது.

மாஸ்கோ, 

உக்ரைனில் ஜைட்டோமைர் பிராந்தியத்தில் சிறப்பு நடவடிக்கை படைகளுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது.

அங்கு வெளிநாட்டு கூலிப்படையினர் தங்கி இருந்ததாக தெரிகிறது.

அந்த மையத்தின் மீது துல்லியமாக வழிகாட்டும் ஏவுகணைகளை வீசி ரஷியா நடத்திய தாக்குதலில் கூலிப்படையினர் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதை ரஷிய ராணுவ அமைச்சகம் நேற்று உறுதி செய்தது.

இதுபற்றி ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைனிய ஆயுதப்படைகளின் சிறப்பு நடவடிக்கை படைகளுக்கான பயிற்சி மையத்தில் உயர் துல்லியமான ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைனுக்கு வந்திருந்த வெளிநாட்டு கூலிப்படையினர் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்” என கூறப்பட்டுள்ளது.

Next Story