இங்கிலாந்து சிறையில் நடைபெற்ற ஜூலியன் அசாஞ்சே - ஸ்டெல்லா மோரிஸ் திருமணம்...!


Image Courtesy : Twitter / @wikileaks
x
Image Courtesy : Twitter / @wikileaks
தினத்தந்தி 24 March 2022 12:54 AM GMT (Updated: 24 March 2022 12:54 AM GMT)

பெல்மார்ஷ் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையாளர்கள் பார்வையிடும் நேரத்தில் திருமணம் நடைபெற்றது.

லண்டன்,

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நேற்று திருமணம் செய்துகொண்டார்.

ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசிங்ககளை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார்.

50 வயதான ஜூலியன் அசாஞ்சே 2019 முதல் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தங்கி இருந்தார்.

2011 ஆம் ஆண்டு லண்டன் தூதரகத்தில் இருந்த போது அவருக்கும் ஸ்டெல்லா மோரிஸ், 37 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மோரிஸ், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக  ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 2015 ஆம் ஆண்டு முதல் இவர்கள் காதலித்து வந்துள்ளனர். 

இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். தன்னை விட 13 வயது இளம் பெண் உடன் 2 குழந்தைகளை பெற்ற பின் அவரை நேற்று திருமணம் செய்து கொண்டார் ஜூலியன் அசாஞ்சே.

இவர்களது திருமணம் பெல்மார்ஷ்  சிறைச்சாலையில் கைதிகளை பார்வையாளர்கள் பார்வையிடும் நேரத்தில் நேற்று நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் ஸ்டெல்லா மோரிஸ் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ ஒன்றை விக்கிலீக்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Next Story