நியூயார்க்கில் ஏற்றப்பட்ட உக்ரைன் தேசியக் கொடி


நியூயார்க்கில் ஏற்றப்பட்ட உக்ரைன் தேசியக் கொடி
x
தினத்தந்தி 24 March 2022 10:34 AM GMT (Updated: 24 March 2022 10:34 AM GMT)

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உக்ரைன் நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 4-வது வாரமாக போர் தொடுத்து வரும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட ஏராளமான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. 

இந்த நிலையில், நியூயார்க்கின் உக்ரைன் தூதரக அதிகாரி ஒலெக்செய் ஹாலுபாவ், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் ஆகியோர் இணைந்து நியூயார்க் பவுலிங் க்ரீன் பூங்காவில் அமெரிக்க கொடியையும், உக்ரைன் நாட்டின் கொடியையும் ஒன்றாக ஏற்றினர். 

உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நியூயார்க்கில் உக்ரைன் நாட்டின் கொடி ஏற்றப்பட்டுள்ளதாகவும், போரில் உக்ரைன் வெற்றி பெறும் வரை அங்கு இந்த கொடி பறக்கும் என்றும் நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். 

Next Story